
மீண்டும் வில்லானாக களம் இறங்கும் சரத்குமார்
ஆர்.கே.செல்வமணி இய்க்கதில் வில்லனாக புலன்விசாரணை படத்தில் வில்லானாக அறிமுகமானவர் சரத்குமார் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. அதனால் வில்லனாக நடித்திருந்த சரத்குமார் கவனிக்கப்படும் நடிகரானார்
அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் அதையடுத்து குறுகிய காலத்தில் ஹீரோவாகி விட்டார் சரத்குமார். அந்த சமயத்தில் உள்ள ஹீரோக்களுக்கு போட்டி நடிகராக வளர்ந்து வந்தார். ஆனால் பின்னர் எந்த படத்திலும் வில்லனாக நடிக்காத அவர், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார்.
ராணுவ வீரரின் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திலும் அல்லு அர்ஜூன், சரத்குமார் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி பிரமாண்டமாக படமாக்கப் பட்டிருக்கிறதாம்...