Tuesday, March 18
Shadow

Tag: #ezhumin #vivek #devayani

1000 பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்டு களித்த ‘எழுமின்’!

1000 பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்டு களித்த ‘எழுமின்’!

Latest News, Top Highlights
வி பி விஜி இயக்கத்தில் விவேக் மற்றும் தேவயாணி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் ‘எழுமின்’. குழந்தைகளின் தற்காப்புக் கலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பத்திரிக்கையாளர்களாலும் பெரும் நட்சத்திரங்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில், விகாஷ் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 1000 பேர் இப்படத்தை கண்டு களித்தனர். பள்ளி நிர்வாகம் மூலம் இந்த காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம் என்று படத்தினை பார்த்த மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். மேலும், பல மாவட்டங்களில் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியருக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்குமாறு கே...
“எழுமின்” திரைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்!

“எழுமின்” திரைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்!

Latest News, Top Highlights
வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய “செய்தி மற்றும் வி...
“எழுமின்” படத்துக்காக விவேக் எடுக்கும் புது அவதாரம்

“எழுமின்” படத்துக்காக விவேக் எடுக்கும் புது அவதாரம்

Latest News, Top Highlights
மாணவர்களுக்கு எழுச்சி கொடுக்கும் வகையில் “எழுமின்” திரைப்படத்திற்காக சிறப்பாக உருவான “எழு எழு” என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடலுக்கான ஐடியாவை சொல்லும் போதே, “இப்பாடலை நீங்கள் தான் எழுத வேண்டும்” என்று நடிகர் விவேக்கிடம் கூறியுள்ளார் இயக்குநர் வி.பி.விஜி. அதனை ஏற்று சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும்படி நடிகர் விவேக்கும் பாடல் வரிகளை மிகவும் சிரத்தையுடன் எழுதியுள்ளார். பாடல் வரிகளை எழுதி முடித்தவுடன் இப்பாடலுக்கு அனிருத்தின் குரல் மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்பது நடிகர் விவேக்கின் எண்ணமாக இருந்திருக்கிறது. அதன்படி, இப்பாடலுக்காக அனிருத்தை இயக்குநர் வி.பி.விஜி தொடர்பு கொண்ட பொழுது, “எழுமின்” கதையை பற்றியும் பாடல் வரிகளை பற்றியும் விரிவாக கேட்டறிந்திருக்கிறார். அவருக்காக “எழுமின்” டிரெய்லரும் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பார்த்த அனிருத் ...
விவேக் நடிக்கும் “எழுமின்” படத்துக்காக தனுஷ் பாடிய பாடல்

விவேக் நடிக்கும் “எழுமின்” படத்துக்காக தனுஷ் பாடிய பாடல்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். நடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ...
ஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்

ஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்

Latest News, Top Highlights
சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பேசும்போது, ‘இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் ...
“எழுமின்” படத்தை என் மகளுடன் பார்ப்பேன் நடிகர் கார்த்தி

“எழுமின்” படத்தை என் மகளுடன் பார்ப்பேன் நடிகர் கார்த்தி

Shooting Spot News & Gallerys
வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, “இந்தப் படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லர் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் கல்லூரி மற்றும் பள்ளி விழாக்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் ஒன்றை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள், அது சினிமா. சினிமா பாடல்களைத்தான் பாடுகிறார்கள், சினிமா பாடல்களுக்குத்தான் டான்ஸ் ஆடுகிறார்கள். இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்றால் கூட எல்லாம் சினிமா மயமாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, தற்காப்புக் கலையை அடிப்படையாக வைத்து ஒரு படத்...
விவேக் ஜோடியாக தேவயானி நடிப்பில் உருவாகும் “எழுமின்”

விவேக் ஜோடியாக தேவயானி நடிப்பில் உருவாகும் “எழுமின்”

Latest News, Top Highlights
சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள். இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப...