![சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்றினேன் – படத்தொகுப்பாளர் ரூபன்](https://www.cinemapluz.com/wp-content/uploads/2017/12/Velaikkaran-Ruban2.jpg)
சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்றினேன் – படத்தொகுப்பாளர் ரூபன்
வேலைக்காரன் படத்தின் எடிட்டிங் பணிகளை சிறப்பாக்க சிவகார்த்திகேயன் ரசிகர்களை பின்பற்ற ஆரம்பித்தேன் என்று படத்தொகுப்பாளர் ரூபன் தெரிவித்துள்ளார்.
'வேலைக்காரன்' படத்தின் ப்ரோமோக்கள் மக்களிடையே பிரபலமடைந்ததற்கு, அதன் அற்புதமான படத்தொகுப்பு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது பலரை, இப்படத்தின் எடிட்டர் ரூபன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியுள்ளது. முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணிபுரியும் ரூபன் வெற்றிகள் மற்றும் பாராட்டுகளை பெற்றும் நிதானத்தோடும் தெளிவோடும் உள்ளார்.
சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தை பற்றி எடிட்டர் ரூபன் பேசுகையில், '' சிவகார்த்திகேயன் எனது நீண்ட நாள் நண்பர். 'ரெமோ' படத்திற்கு பிறகு அவருடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆனால் ஒரு எடிட்டராக அவரை நான் ஒரு ஸ்டாராக தான் பார்ப்பேன். இந்த கண்ணோட்டம் எனது பணியை மேலும் சிறப்பாக்க உதவுகிறது. அவரது ரசிகர்கள் அவர...