
மினி விவசாயியாக வலம் வரும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், பிற்காலத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். கடந்த சில வருங்களாக நடிகர் ஆரி விவசாயிகள் பிரச்னைக்காக போராடி வருகிறார். விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் விவசாயத்தை முன்னிறுத்தி போன்ற நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது,
‘‘ இதுநாள் வரை நான் எனது மகளுக்கு பர்கர், பீட்சா போன்ற உணவுகளை வாங்கி கொடுத்தது இல்லை, அப்படி இருக்க அந்த மாதிரி உணவுகளை சாப்பிட சொல்லும் விளம்பரத்தில் மட்டும் எப்படி நடிக்க முடியும். இங்கே சொல்லப்பட்ட விஷயங்களை பார்க்கும் போது எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழைப்பழம் போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். பிற்காலத்தில் இதை விட பெரியதாக விவசாயம் ...