மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஃபீல் மை லவ்’ ஃபர்ஸ்ட் லுக்… காதலும் உணர்வும் கலந்த புதிய பான் இந்தியா திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஃபீல் மை லவ்’ ஃபர்ஸ்ட் லுக்... காதலும் உணர்வும் கலந்த புதிய பான் இந்தியா திரைப்படத்திற்கு உற்சாக வரவேற்பு!
சென்னை:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான ‘ஃபீல் மை லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் A. N. பாலாஜி, தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக ‘ஃபீல் மை லவ்’ உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ...

