“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு
“35 ஆண்டுகால கனவு ‘மகுடம்’ மூலம் நனவாகியுள்ளது” – இயக்குநராக அறிமுகமாகும் விஷால் உருக்கமான பேச்சு
“என் கனவில் நான் நம்பிக்கை வைத்தேன்; அதனால்தான் இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது” – ‘மகுடம்’ படத்தின் நிகழ்வில் விஷால் நெகிழ்ச்சி
நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களில் பயணித்த விஷால், தற்போது இயக்குநராகவும் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஷால் தனது 35 ஆண்டுகால இயக்குநர் கனவு, படத்தின் உருவாக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள், தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
‘மகுடம்’ திரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு முதலில் நன்றி தெரிவித்த விஷால், தன் மீது அவர் வைத்த நம்பிக...





