Saturday, December 14
Shadow

Tag: #gahzhi #raana #tappsi #pvpcinemas #athulkulgarni

இதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால் கலக்க வருகிறது ‘காஸி’

இதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால் கலக்க வருகிறது ‘காஸி’

Latest News
நம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் பேசி வெளிவந்துள்ள பல படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்தக் கால கப்பலோட்டிய தமிழன் தொடங்கி 1921, ஜெய்ஹிந்த் .மதராசப்பட்டினம் , லகான் வரை ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தேசம் பற்றிப் பேசியவை. அந்த வகையில் ஒரு படமாக 'காஸி' படமும் உருவாகியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் அடிப்படையில் படக்கதை உருவாகியிருக்கிறது. கண் முன்னே எதிரில் நின்று போர் தொடுக்காமல் எதிரி நாடு மறைந்து கொண்டு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நம் நாட்டின் மீது போர் தொடுக்கிறது. அதை நம் நாட்டு வீரர்கள் எப்படி எதிர்கொண்டு எதிர்க்கிறார்கள் ? எதிரிகளிடமிருந்து அவர்கள் எப்படி நம் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதைக்களம். பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.டாப்சி தான் கதாநாயகி. இவர்களுடன் கே.கே.மேனன், அ...