
புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கானா பாலா பிறந்த தினம்
கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.
இவர் பாடிய திரைப்படபாடல்கள்
ஸ்ரீகாந்த் தேவா இசையில் "பிறகு" படத்தில் "பதினொரு பேரு ஆட்டம்", "உன்னைப்போல பெண்ணை" பாடல், ஜெயராம் புஷ்பராஜ் இசையில் ":தொடக்கம்" படத்தில் "போனப் போட்டு" பாடல், ஸ்ரீகாந்த் தேவா இசையில் "வேதா" படத்தில் "சிக்கு புக்கு ரயிலு" பாடல், சந்தோஷ் நாராயணன் இசையில் அட்டைக்கத்தி படத்தில் "ஆடி போனா ஆவணி" மற்றும் "நடுக்கடலுல கப்பல" பாடல்கள், நாராயணன் இசையில் பீட்சா படத்தில் நெனைக்குதே" பாடல், எஸ்.தமன் இசையில் "கண்ணா லட்டு...