
இன்று ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கும் சூர்யா
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். நவரச நாயகன் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. மேலும் லைக் மற்றும் பார்வையாளர்களில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `கேங்' படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக தெலுங்கு உரிமையை கைப்பற்றியிருக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்து...