“அஷோக் செல்வன் என் ட்ரீம் ஃப்ரெண்ட்… ஹரிஷ் கல்யாண் ஒரு அசத்தலான திறமைசாலி!” – அன்பில் அவன் நிகழ்ச்சியில் மனம் திறந்த கெளதம் கார்த்திக்
“அஷோக் செல்வன் என் ட்ரீம் ஃப்ரெண்ட்… ஹரிஷ் கல்யாண் ஒரு அசத்தலான திறமைசாலி!” – அன்பில் அவன் நிகழ்ச்சியில் மனம் திறந்த கெளதம் கார்த்திக்
‘அன்பில் அவன்’ திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் கெளதம் கார்த்திக் தனது நெருங்கிய நண்பர்களான அஷோக் மற்றும் ஹரிஷ் குறித்தும், இசையமைப்பாளர் கெளதம் கார்த்திக்கின் திறமை குறித்தும் மனம் திறந்து பேசினார்.
நட்பைப் பற்றி பேசிய அவர், “எல்லோருக்கும் ஒரு ட்ரீம் ஹஸ்பண்ட், ட்ரீம் வைஃப் என்று இருப்பார்கள். எனக்கு ஒரு ட்ரீம் ஃப்ரெண்ட் என்று சொன்னால் அது அஷோக் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹரிஷும் அஷோக்கும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நட்பையும் சகோதரத்துவத்தையும் சம்பாதித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது,” என்றார்.
‘அன்பில் அவன்’ ஒரு காதல் கதையாக இருந்தாலும், தங்களது நட்பையும் சகோதரத்துவத்தை...
