
விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. வெற்றியின் அறிகுறியில்
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,' Amme Nararyana Entertainment' மற்றும் ' 7C's Entertainment Private Limited' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிட...