
ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் யோகி பாபுவின் “கூர்கா”
இயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப்படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’ கட்டமாகும். அவரது "100" திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது அடுத்த திரைப்படம் "கூர்கா" இந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. வேடிக்கை நிறைந்த டிரைலர் மற்றும் பெரிய பிரபலங்கள் பங்கு பெற்ற பாடல்கள் காரணமாக படத்திற்கு ஆடம்பரமான வரவேற்பு உள்ளது.
காட்சி விளம்பரங்களை பார்த்த பிறகு இது மற்றொரு ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படமா என்பதை அறியும் ஆர்வத்தில் இயக்குனர் சாம் ஆண்டனை கேட்டால், அவர் கூறும்போது, “நிச்சயம் இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல. ஆனால் ஒரு சில ஸ்பூஃப் விஷயங்கள் படத்தில் உள்ளன, ஆனால் படத்தின் முக்கிய மையக்கரு ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியில் அமைக...