
ஜிப்ரான் இசையில் உருவான இசை ஆல்பத்தை வெளியிட்ட உலக நாயகன் கமல்ஹாசன்
Ghibbie Comic cinemas சார்பில் ஜெயா ராதாகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுத, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் "Get your freaking hands off me" என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்போது கல்லூரி மாணவ, மாணவியர் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். முன்னதாக ஜேப்பியார் கல்லூரி முதல்வர் வேணுகோபால் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். ரெஜினா ஜேப்பியார் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.
கமல் சார் இருக்கும் மேடையில் பேசுவது பதட்டமாக இருக்கிறது. எதை பற்றி பேச பயப்படுகிறோமோ, கூச்சப்படுகிறோமோ அதை நிச்சயம் பேச வேண்டும். இதற்கு முன்னோடி கமல் சார். அவர் போட்ட பாதையில் தான் நான் எழுதி வருகிறேன். பாலியல் வன்கொடுமை உலகம் முழுக்க நடந்து வருக...