முன்னணி தொழிலதிபர்களை கவுரவித்த ‘நியூஸ் 7 தமிழ்’ – “விருதுகள் வெற்றிக்கான ஊக்கமாக அமைய வேண்டும்” : GKM தமிழ்குமரன் வாழ்த்துரை
முன்னணி தொழிலதிபர்களை கவுரவித்த ‘நியூஸ் 7 தமிழ்’ – "விருதுகள் வெற்றிக்கான ஊக்கமாக அமைய வேண்டும்" : GKM தமிழ்குமரன் வாழ்த்துரை
சென்னை :
தொழில் துறையில் சாதனை படைத்தவர்களின் உழைப்பையும், புதிய தலைமுறை தொழில்முனைவோரின் முயற்சிகளையும் கவுரவிக்கும் நோக்கில் ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி சார்பில் Business Excellence Awards 2026 விருது வழங்கும் விழா, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் மற்றும் தங்கள் துறையில் தனித்துவமான வெற்றியைப் பதிவு செய்த ஆளுமைகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, அவர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்,...
