
கிளாப்போர்ட் புரொடக்ஷன்“ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ”கோலிசோடா 2“
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி…இதை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ சார்பில் தயாரித்து வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதே நிறுவனம் தற்போது கோடை கொண்டாட்டமாக மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள ‘கோலிசோடா 2’ படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்...