துல்கர் சல்மான் படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கௌதம் மேனன்!
ஒரு திரைப்படத்தின் ஸ்டைலான தயாரிப்பானது ஒரு இயக்குனரின் தரத்தை வெளிப்படுத்துகிறது, இது படைப்பாளருக்கு மிகவும் சவாலான ஒரு பணி. இந்த வகையான ஸ்டைலிஷ் திரைப்படங்களை கொடுப்பதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் "முன்னோடி". அவரின் "மின்னலே" தொடங்கி, அடுத்து வரவிருக்கும் துருவ நட்சத்திரம் வரை அவரின் ஸ்டைலிஷான படைப்புகள் இளம் படைப்பாளிகள் அவரை பின்தொடர ஊக்கப்படுத்துகிறது.
இது நாள் வரை கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், அவரது ஸ்டைலான நடிப்பு திறன்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார். தென்னிந்திய இளம் ரசிகர்களின் கனவு நாயகனான நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
இயக்குனர் தேசிங் பெரியசாமி இது பற்றி கூறும்போது, "கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடி...