
குருமூர்த்தி’ விமர்சனம்
நட்டி ,பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா,யோகிராம்,
சஞ்சனா சிங், அஸ்மிதா
மற்றும் பலர் நடித்துள்ள படம்.கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார்.பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ளனர்.தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.எஸ். என். பாசில் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ராம்கி ஒரு பெரிய தொழிலதிபர் .அவர் ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு பிரச்சினை வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அதை ஒரு மூன்றுபேர் திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது.பயத்தினால் ஒருவர் மறைத்து வைக்க இன்னொரு...