எனது கனவுகளை நனவாக்கியது இயக்குநர் சுந்தர்.சி – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி
நான் சிரித்தால்’ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் குஷ்பூ சுந்தர். C தயாரிப்பில் உருவாகும் படம்இந்த படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் நேற்று மிக பிரமாண்டமாக சென்னையில் நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட இப்படத்தின் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:-
நடிகை குஷ்பூ பேசும்போது,
நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம் என்றார்.
ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் பேசும்போது,
இப்படத்தில் எனக்குப் பிடித்த விஷயம், எந்த கவலைகளும் உள்ளுக்குள் கொண்டு போகாமல் இருந்தால் நன்றாக ...