
பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள “இலை” படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பெண்களை மையமாக்கி அவர்களின் கல்வியைப் பற்றிப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம்தான்' இலை'.
இப்படத்தை பினீஷ் ராஜ் இயக்கியுள்ளார். லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங்மோகன் . மலையாள நடிகை ஸ்ரீதேவி , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ் , கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம். காவ்யா நடித்துள்ளார்கள்.
இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.
"இலை'' படத்தைப் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்ததுடன் படத்தைப் பாராட்டியுள்ளார்கள்.
"இது ஒரு தரமான படம். பெண் கல்வி பற்றி நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் படம். வணிக ரீதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த போது எந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை. எந்த வாக்குவாதமும் ...