
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான “ இளமி “
ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் “ இளமி ”
இந்த படத்தில் “சாட்டை” படத்தில் கதாநாயகனாக நடித்த யுவன் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடித்திருக்கிறார்கள். மற்றும் ரவிமரியா, பாண்ட்ஸ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரிக்கிறார் ஜே.ஜூலியன் பிரகாஷ்..
மத்திய அரசு தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த நேரத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இந்த இளமி படத்தை வருகிற 25 ம் தேதி உலகமுழுவதும் வெளியிடுகிறோம்.
ஜல்லிக்கட்டின் அருமை, பெருமை பற்றியும், தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாகவும் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். நிச்சயம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் என்றார் இயக்குனர்....