
ரஜினி மற்றும் கமலை நம்பி நான் சென்னை வரவில்லை என் திறமையை நம்பி தான் வந்தேன் இளையராஜா
இசைஞானி இளையராஜா இந்திய சினிமாவுக்கு மட்டும் இல்லை உலக இசைக்கு ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்லணும் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து கேள்வி ஞானம் மூலம் இசையறிந்த இளையராஜா இசை உலகின் மூடிசூடமன்னனாக திகழ்கிறார். இந்திய இசையை உலக அளவுக்கு கொண்டுபோன பங்கு இவருக்கும் உண்டு .
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அப்போது, இசை இருக்கும் வரை தான் இருப்பேன் என்று இளையராஜா பெருமிதத்துடன் தெரிவித்தார்.இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். 20,000 மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். அவர் வெளிநிகழ்ச்சிகளில் அதிக அளவில் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜூன் 2-ம் தேதி இவரின் பிறந்த நாள் என்றபோதும், 75-வத...