
என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான 'இளையராஜா 75' விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மரியாதைக்குரிய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் பேசும்போது,
'இளையராஜா 75' விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசை பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக...