
நாளை இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த் ஆன்மிக வழிகாட்டிகளை சந்தித்து ஆசி
அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் நாளை இமயமலை செல்கிறார். இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது குருமார்கள், ஆன்மிக வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெற ரஜினி திட்டமிட்டுள்ளார்
3 வருடம் கழித்தே அரசியல் பிரவேசம் என்று கூறினாலும் நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சிக்கான பணிகளில் தீவிரமாக உள்ளார். ரஜினி ரசிகர் மன்ற பெயர் மாற்றம், உறுப்பினர் சேர்க்கை என்று அடுத்தடுத்து பணிகள் ஜரூராக நடந்தன.
தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. ரசிகர் மன்றம் மூலமும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்கிழமை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை எதற்காக என்றும், எம்ஜிஆர் போன்ற சிறப்பான ஆட்சியைத் தருவேன் என்றும் முழ...