
இந்தியன் – 2 படத்தின் கதை கசிந்தது
தனிக்கட்சி தொடங்கி உள்ள கமல்ஹாசன் கைவசம் உள்ள 3 படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். விஸ்வரூபம்-2 படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும். சபாஷ் நாயுடு படம் பாதியில் நிற்கிறது.
இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் தயாராகி உள்ளார். இயக்குனர் ஷங்கர் கடந்த மாதம் தைவான் நாட்டில் இந்தியன்-2 ஹைட்ரஜன் பலூனை பறக்கவிட்டு பட வேலைகளை ஆரம்பித்தார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்த படத்தில் மக்களை கவரும் புதிய விஷயங்களை சேர்க்கின்றனர். 1996-ல் வெளியான முதல் பாகம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றி பேசியது.
இரண்டாம் பாகத்தில் அரசியல்வாதிகளின் ஊழல் தோலுரிக்கப்படுகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஊழல்களை இந்த படத்தில் காட்சி படுத்துகின்றனர். வங்கிகளில் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் தொழில் அதிபர்க...