
இந்திரஜித் – விமர்சனம் 3/5
தமிழ் சினிமாவில் முதல் முறையாக அட்வென்ஜர்ஸ் கதையாக உருவாகியுள்ளதுதான் இந்த இந்திரஜித்.
புதையலை தேடி அலையும் ஒரு கதை தான் இந்த ‘இந்திரஜித்’. பல வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து ஒரு கல் பூமியில் விழுகிறது. அந்த கல் பல மருத்துவ அதிசயங்களை கொண்டுள்ளது.
அந்த கல்லை பயன்படுத்தினால் நோய் நோடியில்லாமல் 400 வருடங்கள் கூட மனிதனால் வாழமுடியுமாம்.
சித்தர்கள் அந்த கல்லை எங்கோ புதைத்து வைக்க, நாளடைவில் அந்த குறிப்பு மறைந்து போகிறது. அந்த கல்லை தேடும் பணியில் இறங்குகிறார் கெளதம் கார்த்திக். அவருடன் அவரது ஆசிரியர் மற்றும் நண்பர்களும்.
அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார்.
கடைசியாக அந்த அற்புதக் கல்லை யார் எடுக்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
பல படங்களில் சாக்லேட் பாய் போன்று வந்து செல்லும் கெளதம் கார்த்திக் இந்த பட...