ஷங்கர் – கமல் இணையும் `இந்தியன் 2′ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'.
இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஏ.ஆர்.ரகுமானால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அனிருத்தோ ...
