ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘ஆலி’ – புதிய தலைமுறை படைப்பாளிகளின் உணர்வுபூர்வமான திரைப்படம்!
ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் 'ஆலி' – புதிய தலைமுறை படைப்பாளிகளின் உணர்வுபூர்வமான திரைப்படம்!
புதிய முகங்கள், புதிய சிந்தனைகள், வித்தியாசமான கதைக்களங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மலையாளத் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகள் உருவாகி வருகின்றன. நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக, இளம் படைப்பாளிகளின் படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிப் பாதையில் பயணித்து வருகின்றன.
அந்த வரிசையில், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'ஆலி'. முழுக்க முழுக்க புதிய அணியின் முயற்சியாக உருவாகியுள்ள இந்தப் படம், காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் மனித உறவுகளின் ஆழமான உணர்வுகளை பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.
தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை பின்னணியாகக் கொண்டு நகரும் இப்படத்தின் கதை, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. காதல், குடும்ப உறவ...
