
இத்தாலிய தூதரகத்தில் தமிழர் ஸ்ரீதர் ஒவியம்
உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த “மோனாலிசா” தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி. சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான். உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும்.
இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திரமாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனை...