
ஜெய்க்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு?
சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஜெய். இவர் குடிபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று விபத்தை உண்டாக்கியதாக சென்னை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்டுள்ளார்.
அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்துசெய்ய போக்குவரத்து போலீசார் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சிபாரிசு செய்துள்ளனர். இதுதொடர்பாக நடிகர் ஜெய்யிடம் விளக்கம் கேட்டு, உரிய பதிலை பெற்று அதன்பிறகு அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.
நடிகர் ஜெய் மீதான வழக்கு குறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நடிகர் ஜெய் ஏற்கனவே குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை உண்டாக்கியதற்காக 2 முறை அபராதம் கட்டியுள்ளார். அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும், கிண்டி போக்குவர...