
ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் ஜேப்பியாருக்கு அருங்காட்சியகம்
1990 களிலே 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி, முதன்மை வகித்து தன்னிகரற்று திலகமாய் திகழ்ந்தவர், கலைத்தலைவர், எங்கள் கதாநாயகர், அனைவரின் அன்பிற்கும் பரிசாய் “கல்வித்தந்தை” என போற்றப்படுபவர், மறைந்த “முனைவர். டாக்டர். ஜேப்பியார்” அவர்கள்.
அவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக ஓர் கல்வியாளருக்காக ஓர் பிரம்மாண்டமான அருங்காட்சியகம், ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், எங்கள் கதாநாயகர் ஈன்றெடுத்த பொன்மகளும், ஜேப்பியார் கல்லூரியின் வேந்தருமான டாக்டர். மு. ரெஜினா ஜேப்பியார் அவர்களால் நிறுவப்பட்டது.
எங்கள் கதாநாயகரின் பல்துறை சாதனைகளையும, வாழ்வியலையும், தோற்றம் முதல் மறைவு வரை எம் கண்ணெதிரே தத்ரூபமாய், சீரும் சிறப்புமாய், சித்தரித்த கலை வல்லுனல் திரு. A. P. ஸ்ரீதர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
இன்று காலை 10.30 மணியளவில் இவ்வருங்காட்சியகத்தின் திறப்பு...