
ஜருகண்டி – திரைவிமர்சனம் (தரிசிக்கலாம்) Rank 3.5/5
கடந்த சில வாரங்கள் போகவே இந்த வாரமும் தமிழ் சினிமாவுக்கு நல்ல வாரம் என்று தான் சொல்லணும் இந்த வார படங்களும் ரசிக்கும்படியான படங்களாக வெளியாகி இருப்பது மேலும் ஒரு மகிழ்ச்சி என்று தான் சொல்லணும்.
இந்த வாரம் வெளியாகி இருக்கு மஊகிய படங்களில் ஒன்று ஜெய் அறிமுக நாயகி ரெபோ மோனிகா ஜான் யோகிபாபு,ரோபோ சங்கர்.டேனி.இளவரசு மற்றும் பலர் நடிப்பில் நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி நண்பர்களாக சேர்ந்து பணிபுரிந்த ஒரு படம் நட்புக்கு தோல்வி இல்லை என்பதுபோல படமும் வெற்றிப்படம் தான் என்று சொல்லும் அளவுக்கு அமைத்துள்ளது குறிப்பிடவேண்டிய விஷயம்
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். பணம் கட்டாதவர்களின் கார்களை எடுத்து செல்லும் வேலை செய்து வருகிறார். ஒருநாள் கவுன்சிலர் ஒருவரின் காரை தூக்குவதால் அவருடைய வேலை பறிபோகிறது. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில்...