Tuesday, March 18
Shadow

Tag: #jeojery

முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி

முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி

Latest News, Top Highlights
உல்லாசம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல முன்னனி நடிகர்களுடன் பல விளம்பர படத்தை இயக்கி முன்னனி இயக்குனராக திகழ்பவர் ஜேடி ஜெர்ரி. இவரின் மகன் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துள்ளார். தற்போது பிரியதர்சன் ஜோ ஜெர்ரி ஒரு விளம்பர படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி ஜாஸ் விளம்பரப்படப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறார். தந்தையை போலவே மகனும் தனது முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்துள்ளார். ஜாஸ் பர்ப்யூம்ஸ் பிராண்ட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட விளம்பரப்படப் போட்டியில், "இன்டர்வியூ" என்ற தலைப்பில் பங்கேற்ற 300 படங்களில் ஜோ ஜெர்ரியின் விளம்பரப் படம் முதலிடம் பெற்று 1 லட்ச ரூபாய் பரிசை வென்றுள்ளனர். “இது நாங்கள் பங்கேற்ற முதல் போட்டி. நான் இயக்கிய முதல் விளம்பரம். எங்கள் குழுவுக்கு ஓர் அற்புதமான அனுபவம்” என்றார் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி....