Monday, June 24
Shadow

Tag: #Jiiva

தமிழ்ப்படம் 2.0 படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜீவா

தமிழ்ப்படம் 2.0 படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜீவா

Latest News, Top Highlights
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ்ப்படம்'. சிவா, திஷா பாண்டே உள்பட பலரும் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சமீபத்தில் வெளியான இந்த பட போஸ்டர்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஜீவா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அநேகமாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஜீவா வந்து கலக்குவார் என்று நெட்சன்கள் பேசி வருகின்றனர். சென்னையை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மலேச...
ராஜூ முருகனுடன் ஜிப்சி ஓட்ட தயாரான ஜீவா

ராஜூ முருகனுடன் ஜிப்சி ஓட்ட தயாரான ஜீவா

Latest News, Top Highlights
ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் ‘ஜிப்ஸி’. கீ, கொரில்லா படங்களைத் தொடர்ந்து ஜீவா ‘ஜிப்ஸி’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன். குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இவர் இயக்கும் ‘ஜிப்ஸி ’படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், வினோத், பிரம்மா, சத்யா மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்கு...
கலகலப்பு-2  திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

கலகலப்பு-2 திரைவிமர்சனம் (சரவெடி) Rank 3/5

Review, Top Highlights
சுந்தர் சி இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது கலகலப்பு. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. மீண்டும் தனது கிளுகிளுப்பூட்டும் காமெடி பட்டாளத்தை களமிறக்கியிருக்கிறார் சுந்தர் சி, இக்கூட்டணி எடுபட்டதா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். ஜெய் தனது பூர்வீக சொத்து ஒன்றை கண்டுபிடிக்க காசிக்கு செல்கிறார். அங்கு ஜீவா நடத்தி வரும் ஒரு பாழடைந்த விடுதி ஒன்றில் தங்குகிறார். தாசில்தாராக வரும் நிக்கி கல்ராணி மீது காதல் கொள்கிறார் ஜெய். இதற்கிடையே தனது தங்கைக்கு மாப்பிள்ளையாக சதீஷை தேர்வுசெய்யும் ஜீவா, சதீஷின் தங்கை கேத்தரின் தெரசாவுடன் காதல் வயப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜீவா நடத்தும் விடுதிதான் தனக்கு சேரவேண்டிய இடம் என்பது தெரியவர, ஜீவாவுடன் நட்புறவாடுகிறார் ஜெய். இதுஒருபுறம் நடக்க தங்கள் இருவரிடமும் முன்பு பணத்தை ஏமாற்றிய சிவா, த...
ஜிப்ஸியோடு இறங்கும் ஜீவா – ராஜு முருகன்!

ஜிப்ஸியோடு இறங்கும் ஜீவா – ராஜு முருகன்!

Latest News, Top Highlights
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் த...
ஜீவாவின் கொரில்லா படப்பிடிப்பு தொடங்கியது

ஜீவாவின் கொரில்லா படப்பிடிப்பு தொடங்கியது

Latest News, Top Highlights
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும...
விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியிருக்கிறது. அதன்படி விஜய்யின் அடுத்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் தான் விஜய் நடிக்கிறாராம். இதுகுறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்ததாகவும், விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜீவா கூறியிருக்கிறார். அந்த 100-வது படத்திற்கான கதைகள் கேட்கும் வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்...
மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் ஜீவா

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் ஜீவா

Latest News, Top Highlights
ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற'. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ' படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு ஐக் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திலும் ஜீவா நாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `கீ' படத்தை தயாரித்திருக்கும் மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப...