
இரண்டு வருட காத்திருப்பிற்கு பலன் – “ஜானி” ஹரி உற்சாகம்!
"மெட்ராஸ்", " கபாலி" என இயக்குநர் பா.இரஞ்சித் பட்டறையில் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு இளம் நடிகர் "ஜானி" ஹரி. "மெட்ராஸ்" திரைப்படத்தில் இவர் நடித்த "ஜானி" கதாபாத்திரத்தின் பெயராலேயே ரசிகர்களால் அறியப்படும் ஹரி, அடுத்தடுத்து "பரியேறும் பெருமாள்", " வட சென்னை" மற்றும் "சண்டக்கோழி 2" ஆகிய திரைப்படங்களின் மூலம் பரபரப்பான நடிகராகி இருக்கிறார்.
தான் நடித்திருக்கும் மூன்று பெரிய படங்களும் வரிசையாக வெளியாகி இருக்கும் உற்சாகத்தில் இருக்கும் ஹரி, தனது அனுபவத்தைக் கூறும்போது,
"இந்த வருசம் நிஜமாவே எனக்கு சூப்பரான வருசம். இடையில் இரண்டு வருசம் பெரிய இடைவெளி இருந்தது. அதை மறக்கடிக்கும் வகையில் " அண்ணனுக்கு ஜே", "பரியேறும் பெருமாள்", " வட சென்னை" மற்றும் "சண்டக்கோழி 2" என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி இருக்கு. சொல்லப்போனா "பரியேறும் பெருமாள்" நடிப்பதற்கு முன்னாடியே "வட சென்னை", " சண்டக்கோழி 2...