
காலா’ சென்சார் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் மறுப்பா?
ஒரு திரைப்படத்திற்கு சென்சார் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து 'கிளியரன்ஸ் லெட்டர்' அதாவது 'தடையில்லா அனுமதிக் கடிதம்' ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் தரவேண்டும். அந்தக் கடிதம் கிடைத்த பிறகுதான் தணிக்கை வாரியம் அந்தப் படத்தை தணிக்கை செய்வதற்கு எடுத்துக் கொள்ளும்.
அதன்படி 'காலா' படத்திற்காக அனுமதிக் கடிதம் வேண்டி தயாரிப்பாளர் சங்கத்திடம் கடந்த மாதமே கடிதம் கொடுத்துவிட்டார்களாம். ஆனால், ஸ்டிரைக்கைக் காரணம் காட்டி அனுமதிக் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக 'காலா' படத் தரப்பிலிருந்து குற்றம் சாட்டுகிறார்கள்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பில், வரிசைப்படிதான் அனுமதிக் கடிதம் கொடுத்து வருகிறோம். அதன்படி 'காலா' படத்திற்கும் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 'காலா' தயாரிப்பு நிறுவனம் சார்பாக கலந்து க...