
காலா.. கரிகாலான் போராட்டத்தை சொல்லும்பா.ரஞ்சித்
மனிதமாண்புகளை மீட்டெடுக்கும் போராட்டமே காலா படத்தின் மையக்கரு என அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், எளிய மக்களின் பிரச்சினைகளையும், அவர்களுக்கு எதிரான அரசியலையும் காலா படம் பேசும் எனக் கூறினார்.
விழாவில் பேசிய பா.ரஞ்சித், " மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஜினி சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கபாலி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. அந்த படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கருத்துக்களை சொன்னேன்.
சினிமாத்தனமாக படம் ...