
புதுமுகம் தனா நாயுடு நடிக்கும் பேய்த் திரைப்படம் ‘கைலா’
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் திரைப்படம் ‘கைலா.’
இந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, ‘அன்பாலயா’ பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, ‘சிசர்’ மனோகர், ரஞ்சன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானா நாயுடு துபாயில் பிறந்து, வளர்ந்தவர். இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் பேசும்போது, “உலகம் முழுவதும் இன்றுவரை பேய் என்றாலே ஒருவிதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானா நாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார்...