
மீண்டும் இணையும் சூர்யா மற்றும் கௌதம் மேனன் காக்க காக்க 2
நேருக்கு நேர்' படத்தின் மூலம் அறிமுகமானாலும், சூர்யாவின் நடிப்புத் திறமையை 'நந்தா' படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா. சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவாகவும், கமர்ஷியல் ஹீரோவாகவும் உயர்த்தியவர் இயக்குனர் கவுதம் மேனன்.
'காக்க காக்க, வாரணம் ஆயிரம்' என இரண்டு சூப்பர் ஹிட்களை கவுதம் மேனன், சூர்யா கூட்டணி கொடுத்தாலும், 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதை விஷயத்தால் முரண்பட்டு இருவரும் பிரிந்தார்கள். மாறி மாறி அறிக்கைவிட்டுக் கொண்டார்கள். அந்தக் கூட்டணி மீண்டும் இணையக் போகிறது என்று அடிக்கடி செய்திகள் வந்தாலும் அவை வந்த வேகத்தில் காணாமல் போயின.
இப்போது மீண்டும் அப்படி ஒரு செய்தி திரையுலகத்தில் பரவி வருகிறது. 'காக்க காக்க' படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணுவே, இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்து, இயக்குனர் கவுதம் மேனனிடம் கதை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டாராம். அதில் மீண்டும் சூர்ய...