
கலைஞரின் அன்பின் பிணைப்பில் விஜயகாந்த்
வெள்ளித்திரையில் தீவிரவாதிகளையும், வில்லனின் ஆட்களையும் மெஸ்ஸி ப்ளஸ் பீலேவையும் கலந்தடித்த பாணியில் ஒரே ‘கிக்’கில் பந்தாடிய அட்ரெனலின் ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்தை…
கபினி அணை, முல்லைப் பெரியாறு அணை போல ரசிகர்கள் பட்டாளத்தை தங்கள் வசம் தேக்கி வைத்திருந்த ரஜினி மற்றும் கமல் என்ற வசீகர நட்சத்திரங்களையும் மீறி, தமிழகத்தின் கடைகோடி கிராமங்களிலும் தனக்கென ரசிகர்கள் மன்றத்தைப் பெற்றிருந்த புரட்சிக்கலைஞரை…
பத்திரிகைகளின் பேட்டி என்றால், யோசித்து யோசித்துப் பேசி புத்திசாலியாக காட்டிக் கொள்ள முயற்சிப்பதை விட மனதில் பட்டதை டென் தவுசண்ட் வாலா போல தெறிக்கவிட்ட தேமுதிக தலைவரை…
கலைஞரின் ’நிரந்தர ஒய்வு’ இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது, எடுக்கப்பட்ட வீடியோவில் பார்த்த அனைவருக்கும் ஹை வோல்டேஜில் ஷாக், அடித்திருக்கும் என்பது நிச்சயம். ‘ பார்க்கவே கஷ்டமா இருக்கு …பாவம்’ என முணுமுணுக்காதவர்கள் ...