25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது
25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் என தனது நடிப்பின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் கருணாஸ். திரையுலகில் அவர் கால்பதித்து 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு நடிகரின் 25 ஆண்டுகால பயணத்தில் பல படங்கள் இடம்பெறலாம். ஆனால், தனது நீண்டகால திரைப்பயணத்தில் இப்படியொரு கதையை எதிர்பார்த்திருந்ததாக கருணாஸ் கூறுவது ‘என்ன விலை’ படத்தின் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படம், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் மையமாகக் கொ...
