
விக்ராந்த், சுசீந்தினை சுட்டுப் பிடிக்க தயாராகும் மிஷ்கின்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் என இந்த மூன்று பேரும்‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடிக்கின்றனர்.
`தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.
செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன், பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் வருகிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் எளிமையாக நடைபெற்றது.
மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், ராம் பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது இயக்குநர் வெற்றி மாறன் கலந்து கொண்டார்.
வருகிற ஜனவரியி...