
குற்றங்கள், ஊழல்களை தடுக்க செல்போன் செயலியை தொடங்கிய கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, செயல்படும் செயலியாக மையம் செயலியை உருவாக்க காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிக்க வேண்டும்.
பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை, சாமானியர்களும் செய்யத் தூண்டும் செயலி இது. இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில்.
அது எப்படியென்றால், உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள். அதைத்தொ...