
என்னை அரசியலுக்கு வர சொல்லுவது சரில்லை கமல் வேதனை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு கமல் ஆதரவு அளித்தார். அப்போராட்டத்துக்கு நேரில் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக அப்போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்.
அது மட்டும் இல்லாமல் தமிழர்களை பா ஜா க உறுப்பினர் சுப்ரமணிய சாமி பொறுக்கிகள் என்று சொன்னபோது கமல் மிகவும் கொதித்து போனார் யாரை யார் சொல்லுவது என்று அது மட்டும் இல்லாமல் சுப்பிரமணி சாமியை எதிர்த்து குரலும் கொடுத்தார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நிறைவுக்கு வந்தவுடன், தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் கமல். அப்பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து "கமல். அரசியலுக்கு வர வேண்டும்" என்று பலரும் சமூக வலைதளத்தில் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் இது குறித்து கமல், "கேள்.. தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே. உன்னுடன் ந...