
சன் மியூசிக் புகழ் பாலா ஹீரோவாக நடிக்கும் ‘கண்டேன் காதல் கொண்டேன்’
கிரியேட்டிவ் டீம்ஸ் ப்ரெசென்ட்ஸ் E.R ஆனந்தன் தயாரித்திருக்கும் திரைப்படம் "கண்டேன் காதல் கொண்டேன் ". இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் வெங்கட்G.சாமி. இத்திரைப்படத்தில் சன்மியூசிக் புகழ் பாலா கதாநாயகனாகவும், அஷ்வினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் மயில்சாமி, "பத்திரகாளி" ராஜசேகர், "சூதுகவ்வும்" ராதா,கே.ஸ் பழனி, கிங்ஸ் A.மோகன் , கிச்சா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நாகா, ஒளிப்பதிவு செய்கிறார் சுரேஷ் தேவன்.
கதைப்படி நாயகன்,நாயகி இருவரும் பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றனர்.இருவரும் சிறிது காலம் தனியாக சேர்ந்து வாழலாம்,இத்தைகைய வாழ்க்கை பிடித்தால் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதற்காக ஊரை விட்டு வெளியேறி தனியாக நவீன கால முறைப்படி வாழ்கின்றனர்.ஆனால் பின்னர்தான் தெரியவருகின்றது இவர்கள் இருவரும...