ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராகிறார்.
" கண்ணாமூச்சி" என்ற அந்த
படத் தலைப்பை அரசியல் சமூகம் மற்றும் திரை உலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் " மெர்சல்"
இது இந்த நிறுவனம் தயாரித்த 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளரான என்.இராமசாமி அடுத்து " கண்ணாமூச்சி" என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படம் மூலம் வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான்.
பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். இதுவரை ஏற்று நடிக்காத வேடமேற்று திரைக்கதை அமைத்து தனது முதல் படமாக " கண்ணாமூச்சி" படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.
இந்த படத்தின் தலைப...
