கன்னி மாடம் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் போஸ் வெங்கட்
ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் "கேப்டன் ஆஃப் தி ஷிப்" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில் நன்றாக திட்டமிடப்பட்டிருக்கும் போது, அது படப்பிடிப்பு நேரத்தின்போது நிச்சயம் அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக குறித்த நேரத்தில் முடிக்க முடியும். "கன்னி மாடம்" படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது முயற்சியால் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார்.
இயக்குனர் போஸ் வெங்கட் இது குறித்து கூறும்போது, "பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் ம...