
கட்டா குஸ்தி – திரைவிமர்சனம் (மனதை வருடும்) Rank 4/5
கட்டா குஸ்தி இந்த வார ரிலீஸில் மிக சிறந்த பொழுதுபோக்கு அதோடு மிக சிறந்த வாழ்வியல் அர்த்ததயும் சொல்லும் படம். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி கருணாஸ் காலி வெங்கட் முனீஸ்காந்த் ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் செல்ல அய்யாவு இயக்கத்தில் ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் ஜஸ்டின் இசையில் வெளிவந்து இருக்கும் படம் .
கட்டா குஸ்தி என்றதும் இது ஒரு சண்டை படம் மல்யுத்த போட்டி என்று எல்லாம் தோன்றும் ஆனால் அது தான் இல்லை ஆனாலும் மல்யுத்தம் இருக்கு. இந்த கட்டா குஸ்தி கணவன் மனைவிக்குள் நடக்கும் மல்யுத்ததை தான் மிகவும் கலகலவென சிரிக்கும் படி கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
பொள்ளாச்சியில் மைனர் போல சுற்றி திரியும் ஹீரோ விஷ்ணு விஷால் மாமாவாக வரும் கருணாஸ் இவர் தான் கதையின் பலம் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்க்கும் மாமா கருணாஸ் மாப்பிள்ளையின் விதிகளுக்கு பொண்ணு கிடைக்கவில்லை இந்த சூழ...