சுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..!
சமீபத்தில் வெளியான 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு 'கோலிசோடா-2' ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கிறார் க்ரிஷா க்ரூப் .பரதநாட்டியம் தனது உயிர் மூச்சு என்கிற க்ரிஷாவின் பூர்விகம் மலையாளம், வளர்ந்தது மும்பையில்.. என்றாலும் அழகாக தமிழ் பேசுகிறார் .
சில வருடங்களுக்கு முன்பே மலையாளத்தில் ஒரு படத்தில் அறிமுகமானாலும் சினிமாவை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே விஸ்காம் படித்துவிட்டு மீண்டும் திரையுலகில் நுழைந்திருக்கிறார்.
அந்த மலையாள படத்தை பார்த்துவிட்டுத்தான் 'அழகு குட்டி செல்லம்' பட வாய்ப்பு இவரை தேடிவந்ததாம். தொடர்ந்து ஆண்டனி இயக்கத்தில் சாலை என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் வந்த வாய்ப்புதான் 'கோலிசோடா-2'
...