நடிகர் கிருஷ்ணா குலசேகரன் பிறந்த தினம்
கிருஷ்ணா குலசேகரன் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கழுகு திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்படுபவர். இவர் நன்கறியப்பட்ட இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் சகோதரர் ஆவார்.
தற்போது இவர் நடிக்கும் படங்கள் வெற்றிகரமாக அமைகிறது. இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் அவர் சகோதரர் விஷ்ணு வரதனின் இயக்கமாகவே அமைகின்றது.
இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது. திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
கிரகணம், கழுகு 2, வீரா, களரி, மாரி 2, யாக்கை, பண்டிகை, விழித்திரு, யட்சன், யாமிருக்க பயமே, வன்மம், கந்தசாமி, சர்வம், அலிபாபா, ஷாஜகான், அஞ்சலி, இருவர், த டெரரிஸ்ட், உதயா, அலி பாபா , கற்றது கடலளவு, கழுகு, வானவராயன் வல்லவரா...
