![*கிரிஷ்ணம் : மரணத்தை வென்ற ஒரு மாவீரனின் உண்மைக்கதை!*](https://www.cinemapluz.com/wp-content/uploads/2019/02/DSC03850.jpg)
*கிரிஷ்ணம் : மரணத்தை வென்ற ஒரு மாவீரனின் உண்மைக்கதை!*
மரணத்தை வென்று ஒரு மாவீரனான ரியல் ஹீரோவின் கதை தான் 'கிரிஷ்ணம் 'என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்கள் கொண்டவையாக இருக்கும்.
அப்படிப்பட்ட கதைையைக் கொண்ட ஒரு வாலிபன்தான் அக்ஷய் கிருஷ்ணன். திரிச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவன். அவன்படிப்பில் மட்டுமல்ல நடனம் ,நாடகம், மேடைப் பேச்சு ,விவாதம் ,விளையாட்டு என்று சகல துறைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தான்.
கலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் பரிசுகளும் பாராட்டுகளும் அள்ளி வருவான். நல்ல உயரம் ,பளிச்சென்று நிறம் ,உற்சாகம் பொங்கும் உடல்வாகு ,கனவு ஒளிவிடும் கண்கள்,பார்ப்பவரை நேசம் கொள்ள வைக்கும் பரந்த மனம் என்று குறையொன்றும் இல்லாத நிறைகள் வழியும் மாணவன். எனவே அவனது நட்பு வட்டம் பரந்தது. நாளுக்கு நாள் நண்பர்கள் பெருகினர். அவனது வாழ்க்கையில் ஏக்கம், வருத்தம...